60 மாதங்களாக சம்பள பாக்கியை உடனே வழங்க அரசுக்கு ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் சுமார் 800 கூட்டு றவு வீட்டு வசதிசங்கங்கள் செயல்படுகின்றன.
இவற்றில் பணிபுரியும் சுமார் 4 ஆயிரம் பணியாளர் களுக்கு 45 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை சம்பள பாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 10 வருடங்களாக இச்சங் கங்கள் வீடு கட்டகடன் கொடுக் காமல், கொடுத்த கடனை மட்டும் வசூல் செய்து வரு கி றது.
எனவே கூட்டுறவு வீடு கட்டும் சங்கங் களுக்கும் வீடு கட்ட கடன் கொடுக்க ஒவ் வொரு சங் கத் திற்கும் குறைந்தது ஒரு கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்க வேண் டும்.
கூட்டுறவு வீட்டு வசதிசங்கங்களில் பணிபுரியும் பணியா ளர்களுக்கு சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் சங்கங்களுக்கு கடன் வழங்குவதை சரிவர, முறையே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் உள்ள எல்லா அரசு பணியாளர்களுக்கும் வழங்கப்படும் அனைத்து வசதிகளையும், சலுகைகளையும் குறிப்பாக குடும்பஇன்சூரன்ஸ் வசதியையும் வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண் டும் என வலியுறுத்தியுள்ளார்.
