ஹரியானாவில் தலிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கொச்சைப்படுத்தி பேசிய மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங்கை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இது தொடர்பாக தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :-
ஹரியானா மாநிலத்தில் தலித் குழந்தைகள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை இணைய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் வி.கே.சிங் பொறுப்பற்ற முறையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசில் உள்ள அமைச்சர்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது வாடிக்கையாக உள்ளது.
ஆனால், பாரதப் பிரதமர் இதுபோன்ற விரும்பத்தகாத கருத்துகளுக்குப் பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையது இல்லை.
எனவே,பிரதமர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மத்திய வெளியுறவுத்துறை இணைய அமைச்சர் வி.கே.சிங் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும்.
அவரை பதவியில் நீடிக்கலாமா வேண்டுமா என்பதை பிரதமர் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்
