வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும்: தமாகா செயற்குழு வலியுறுத்தல்

வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண் டும் என தமாகா செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் 26 இடங்களில் போட்டி யிட்ட தமாகா, அனைத்திலும் தோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி குறித்து கடந்த வாரம் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலை வர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தி னார்.

இதைத் தொடர்ந்து தமாகா செயற்குழுக் கூட்டம், சென்னை யில் நேற்று நடந்தது. துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், வேலூர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள்:

கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை தமாகா நிர்வாகிகள் கண்காணித்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் நன் கொடை வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங் களிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண் டும். சேவை வரியால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார சுமையை சந்தித்து வருகின்றனர். எனவே, சேவை வரி விதிப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய தேர்தல் முறையில் பணபலம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளது. தேர்தல் களத் தில் அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்குவதே ஜனநாயகமாகும். எனவே, வேட்பாளர்களின் செலவு களை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும். தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்த பல்வேறு சீர் திருத்தங்களை தேர்தல் ஆணையம் கொண்டுவர வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நதி நீர் இணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, நெய்யாறு பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், ‘‘கட்சி தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. தமாகா என்பது தேர்தல் வெற்றி, தோல்விக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. தமிழக மக்களுக் கான தமாகாவின் பயணம் மேலும் தொடரும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *