விவசாயிகளின் கடன்களை வசூல் செய்ய வங்கிகள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்க கூடியது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,
1995 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளின் தற்கொலை ஆண்டுதோறும் பெருகிவருகிறது என சுட்டிகாட்டியுள்ளார் .
இயற்கை சூழ்நிலையால் வானம் பொய்த்தும், கர்நாடகவின் வீண் பிடிவாத போக்கினாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர்,
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய, மாநில அரசு தவறிவிட்டது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் கடன்களை வசூல் செய்ய வங்கிகள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசும், வங்கிளும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
