மேகதாதுவில் தடுப்பணை: கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்: ஜி.கே. வாசன்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரியின் குறுக்கே அணை கண்டிப்பாக கட்டப்படும். தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என கர்நாடக முதல்வர் நேற்று சனிக்கிழமை கூறியிருக்கிறார். இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது மட்டுமின்றி, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

இந்த அணை கட்டப்பட்டால், விவசாயயம் பாதிக்கப்பட்டு, தமிழகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு மத்தி அரசு அனுமதி அளிக்கக் கூடாது. தமிழக அரசும் இதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *