முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என கேரள முதல் மந்திரி தெரிவித்திருந்தார். மேலும் கேரள அரசு தற்போது நிதிநிலை அறிக்கையில் புதிய அணை கட்டுவதற்காக 100 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்திருப்பது ஏற்புடையதல்ல. இது முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. கேரளாவில் தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழலில் அம்மாநில அரசு ஒரு தவறான முடிவை எடுத்திருக்கிறது. இது ஆட்சிபுரியும் கேரள அரசின் தேர்தல் தோல்வி பயத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
