மீனவர் சமுதாயத்தை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் மத்திய அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல் – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=93842#sthash.LI1NAGFh.dpuf

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:மீனவர்கள் கடல்சார்ந்த தொழிலையே வாழ்நாள் முழுவதும் நம்பியிருப்பதால் மீனவச் சமுதாயம் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு சட்டத்திருத்தத்தை கொண்டுவரவேண்டும்.  அச்சட்டத்தின் அடிப்படையில் மீனவர்களுக்கு குறிப்பாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், தொழிற்துறையிலும் அரசின் சலுகைகள் முழுமையாக கிடைக்கப்பெற்றால் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் முறையாக கிடைத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=93842#sthash.LI1NAGFh.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *