மக்கள் நல கூட்டணியில் இருந்து த.மா.கா விலகல்-ஜி.கே.வாசன் பேட்டி

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் மாற்று அணி தேவை என்பதை உணர்ந்து மக்கள் நலக் கூட்டணியோடு தொகுதி உடன்பாடு வைத் துக் கொண்டோம். அதனால் தான் அந்த கூட்டணி தே.மு. தி.க.- மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா. எனறு அறிவிக் கப்பட்டது.

தனித்தனியாக தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டது. எனவே கூட் டணி தொடருமா? தொடராதா? என்ற கேள்வி எழவில்லை. கட்சியின் நிர்வாக வசதிக்காக 12 மண்டலங்களாக பிரித்து வருகிற 28-ந்தேதி முதல் சுற்றுப் பயணம் மேற் கொள்கிறேன்.

ஜூலை மாத இறுதியில் இந்த சுற்றுப் பயணம் நிறைவுறும். ஒவ்வொரு பகுதியிலும் கிராமங்கள் தோறும் கட்சியை முழு அளவில் வளர்ப்பது பற்றி முடிவுகள் எடுப்போம். உள்ளாட்சி மன்ற தேர்தலை பொறுத்தவரை பல இடங் களில் தனிப்பட்ட முறையில் வெற்றி பெறும் அளவுக்கு வலுவாக இருக்கிறோம். எனவே வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளில் தனித்து வெற்றி பெறும் அளவுக்கு எங்களை நாங்கள் தயார்படுத்துக் கொள்வோம்.

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசப்படுவது எனவே அதுபற்றி அப்போது முடிவு செய்வோம். வருகிற 24-ந்தேதி மக்கள் நலக் கூட்டணி சார்பில் நடத்தப் படும் இப்தார் விருந்து நிகழ்ச் சிக்கு எனக்கும் அழைப்பு விடுத்துள்ளார்கள். அதில் கலந்து கொள்வேன்.

தற்போது சட்டசபையில் பெரும்பாலான கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதற்கு காரணம் தேர்தல் ஜனநாயகப்படி நடக்கவில்லை. பணநாயகப்படி நடந்தது-. சட்ட சபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்வது பற்றி பேசப் படுகிறது.கலைஞர் முன்னாள் முதல்-அமைச்சர், மூத்த தலைவர் அவரது வயது, அனுபவம் உடல் நிலை ஆகிய வற்றை கருத்தில் கொண்டு சரியான இருக்கை வசதிக் கான பணியை அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *