மக்கள் நலக்கூட்டணியில் நீடிக்கிறோம்: வாசன்

திருப்பூர்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அளித்த பேட்டி: அனைத்து தேர்தல்களிலும் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பெரிய கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகிறார்கள். ரூ. 570 கோடி பிரச்னை தொடர்பாக அரசு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ஆயத்த ஆடைகளை சந்தைப்படுத்த புதிய திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். மக்கள் நலக்கூட்டணியில் த.மா.கா., தொடருமா என்பதை கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின் முடிவு செய்யப்படும். தற்போதைய நிலையில் அக்கூட்டணியில் நீடிக்கிறோம் எனக்கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *