மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில்இ அண்மையில் மக்கள் நலக்கூட்டணியினர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி வலுவடைந்தது.

தற்போதுஇ அ.தி.மு.க.இ தி.மு.க அணியினருக்கு இணையான சவாலைக் கொடுக்கும் விதத்தில் மக்கள் நலக்கூட்டணியினருடன் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது.

மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோஇ ஜி.ராமகிருஷ்ணன்இ தொல்.திருமாவளவன்இ முத்தரசன் ஆகியோர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ஜி.கே.வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்துஇ மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் ஜி.கே.வாசனும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமையஇ தே.மு.தி.க. 104 தொகுதிகள்இ ம.தி.மு.க. 29 தொகுதிகள்இ விடுதலை சிறுத்தை கட்சி 25 தொகுதிகள்இ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகள்இ இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகள்இ தமிழ் மாநில காங்கிரஸ் 26 தொகுதிகள் போட்டியிடுவதென உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *