மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை: ஜி.கே. வாசன்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்,
ஜனவரி 26, 2017 இன்று 68 ஆவது குடியரசுத் தினம் நாடு முழுவதும் மிகச் சிறப்பாகச் கொண்டாடப்படுகிறது. மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி என்பது தான் குடியரசு. மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் குரலே மகேசன் குரல். இதனை உணர்ந்து மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமையாகும்.
மேலும் மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், அனைத்து துறையைச் சேர்ந்தவர்கள். என ஒட்டு மொத்த நாட்டு மக்களோடு த.மா.கா. ஒன்றுபடும், செயல்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொண்டு குடியரசுத் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *