பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தரை நியமித்திடுக: ஜி.கே.வாசன்

சென்னை, மதுரை, அண்ணா பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்கும் முதுபெரும் பல்கலைக்கழகங்களான சென்னை, மதுரை, அண்ணா பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஓய்வு பெற்று ஓர் ஆண்டு ஆகியும் இன்னும் அப்பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் பல்கலைக்கழகங்களில் நிர்வாகம் தடைப்பட்டு மாணவர்களின் உயர்கல்வித் திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *