தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. ஜல்லிக்கட்டு நடத்த கடைசி நேரத்தில் எடுத்த முயற்சி மத்திய, மாநில அரசுகளிடையே உள்ள வேறுபாட்டை காட்டுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த தவறியதற்கு இரண்டு அரசுகளுமே பொறுப்பேற்க வேண்டும். மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சரே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான முகத்தை காட்டுகிறது.
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என நாங்களேதான் முடிவு எடுத்தோம். தற்போது கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. நிச்சயம் தொண்டர்கள், மக்கள் விருப்பப்படி கூட்டணி அமையும். இவ்வாறு வாசன் கூறினார்.
