தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் தற்போது ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக ஆளும் அதிமுக அரசு மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. நடந்து முடிந்த கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் மக்கள் பிரச்சனைகள் குறித்து முழு விவாதம் முறையாக நடைபெறவில்லை. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளில் கருத்து கூற விருப்பம் இல்லையென்றாலும் கூட அந்த பிரச்சனைகள் தமிழக மக்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
குறிப்பாக அவசர, அவசரமாக முதலமைச்சரை மாற்றவேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வி எழுந்தது. தமிழக உயர் அதிகாரிகள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி விலகியிருப்பதும அதிமுக அரசின் நிர்வாகத்தில் தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளது. தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கின்ற ஓ. பன்னீர்செல்வம், நேற்று இரவு திடீரென்று பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்திருக்கும் செய்திகள் தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே தமிழக பொறுப்பு ஆளுநர் தமிழக அரசின் நிர்வாகத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தவும், நிலையான ஆட்சி அமையவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வா – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=103445#sthash.ujSXJbaM.dpuf
