தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்

 

ab

 

கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே உள்ள ராஜரத்தினம் அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

கூட்டம் தொடங்கியதும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, அவரது உருவப்படத்துக்கு ஐயா ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது நிர்வாகிகள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:–

* பெருந்தலைவர் காமராஜரை போல உயர்ந்த பதவியில் இருந்தாலும், பணிவும், எளிமையும், அயராத உழைப்பும் கொண்டிருந்தவர் மறைந்த மாமனிதர் அமரர் அப்துல்கலாம் இந்திய திருநாடு 2020–ல் மிகப்பெரிய வல்லரசு நாடாக உருவாக வேண்டுமென்று கனவு கண்டார்.

* இந்தியாவில் ஏவுகணை சோதனை, இந்திய அணு சோதனையில் பங்கு, ஜனாதிபதி மாளிகையை அனைவருக்கும் திறந்து விட்ட பங்கு, அவரது தமிழ் பற்று, அவர் இளைஞர்களுக்கு ஆற்றிய அரிய சொற்பொழிவுகள் இவையெல்லாம் இந்த தேசத்து மக்களை ஈர்த்தது என்பதற்கு அடையாளம்தான் அவர் இறந்த பிறகு மக்களிடையே உருவான தாக்கம்.அப்பேற்பட்ட வாழ்வாங்கு வாழ்ந்த அந்த மாமனிதரின் கருத்துக்களை கல்லூரி, பள்ளி புத்தகங்களில் பாடமாக சேர்க்க வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

* மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களில் அவர் பெயரால் ‘‘என்டோமென்ட்’’ ஒன்றை உருவாக்கி அவர் கண்ட கனவை நனவாகக் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் சொற்பொழிவு நடத்த வேண்டும் என இக்கூட்டம் விரும்புகிறது.

* இதனை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.