தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.பாரமலை காலமானார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாரமலை நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 85.  அவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 3 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உயர் மட்டக்குழு தலைவராக இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *