தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூரில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதே தமிழக அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும். மீட்புப் பணிகள் முடிந்தவுடன் பாதிக்கப்பட்ட மக்கள் இழந்த அனைத்து ஆவணங்களையும் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதுமானதல்ல என்றும், படிப்படியாக நிதி தருகிறோம் எனக் கூறுவதும் முறையானதல்ல என்று தெரிவித்த அவர், தமிழகத்துக்குக் குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
