தமிழக மழை பாதிப்பு பகுதிகளை மத்திய குழு முழுமையாக ஆய்வு செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் மத்தியக் குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், நாகை, திருவாரூர், காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் சென்று மத்தியக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாயிகளுக்கு வணிக வங்கிகள், நபார்டு வங்கிகள் வழங்கிய பயிர்க்கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய மத்தியக் குழு பரிந்துரைக்க வேண்டும் என்றும் வாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.