அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று, ஜிஎஸ்டி மற்றும் சேவை வரி மசோதாவில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில்,அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையில், நிலைத்த தன்மையை ஏற்படுத்த, மத்திய பாரதிய ஜனதா அரசு முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்
ஜிஎஸ்டி மற்றும் சேவை வரி மசோதாவில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையில், திருத்தங்களை கொண்டுவந்து, மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்றும் ஜிகே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்
