தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ரூபாதேவி அவர்கள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது இந்திய தேசத்திற்கும், தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்த்திருக்கிறது

தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ரூபாதேவி அவர்கள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது இந்திய தேசத்திற்கும், தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்த்திருக்கிறது.

இவர் தேசிய அளவிலும், இலங்கை, நேபாளம் போன்ற ஆசிய நாடுகளிலும் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் விளையாடி, நடுவராகவும் பங்கேற்றவர்.

விளையாட்டுப் போட்டிகளில் பெண்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கும் ரூபாதேவி அவர்களை சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது.

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முதலாக சர்வதேச விளையாட்டு போட்டிகளில் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெண் சமுதாயத்திற்கும், தமிழகத்திற்கும், தாய் நாட்டிற்கும் உலக அளவில் புகழ் சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

கால்பந்து வீராங்கனை ரூபாதேவி அவர்கள் விளையாட்டுத் துறையில் மேலும் பல வெற்றிகள் பெறவும், அவர்களது பணி சிறக்கவும், உயரவும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *