தமிழகத்துக்கு ரூ. 3000 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு வாசன் கோரிக்கை
திருவாரூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ. 3 ஆயிரம் கோடி இடைக்கால நிவாரணம் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல என்று வாசன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் சேதமான விளை நிலங்களை பார்வையிட்ட பின் வாசன் பேட்டி அளித்தார். பயிர்க்கடனை தள்ளுபடி செய்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் தர வேண்டும். மக்கள் நலக்கூட்டணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
