தமிழகத்துக்கு காவிரிநீரை பெற்று தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

குறுவை சாகுபடிக்காக வழக்கமாக மேட்டூர் அணை திறக்க 5 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் ஜூன் 12–ந்தேதி மேட்டூர் அணைதிறப்பு இல்லை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழக விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது.
கர்நாடக அரசுடன் பேசி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்று தந்து, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறை குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் நமது நியாயமான கோரிக்கை வெற்றி பெறும்.மதுவினால் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் கெடுகிறார்கள்.
குடிபோதையினால் பல குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
எனவே எதிர்கால சமுதாயத்தை கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.