கர்நாடக தொழிற்சாலைகளின் கழிவு நீர் காவிரியில் கலக்கப்படுவது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் காவிரியில் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பண்டல்கள் அனுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி இதற்கான புக்கிங்கை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியுள்ளது.
இதனால், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அனைத்து ரயில்களிலும் பார்சல் புக்கிங் செய்ய ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்கு முழு உருவம் கொடுக்க வேண்டும்.
இன்றைய சூழலில் இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லை. பொதுத்தேர்தலில் கவனம் செலுத்தி கட்சியைப் பலப்படுத்துவோம் என்றார்.
