ஜி.கே. வாசன் ஆதரவு தலைவர்கள் தில்லியில் முகாம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புதிதாகத் தொடங்கும் கட்சியின் பெயரைப் பதிவு செய்வதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக அவரது ஆதரவாளர்களான பி.எஸ். ஞானதேசிகன், எஸ்.கே. கார்வேந்தன், வேலூர் ஞானசேகரன் ஆகியோர் தில்லியில் முகாமிட்டுள்ளனர். “தமிழ் மாநில காங்கிரஸ்’ (தமாகா) பெயரை மீண்டும் பெறும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதலால் காங்கிரஸிலிருந்து அண்மையில் மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன் தனது ஆதரவாளர்களுடன் விலகினார். மேலும், புதிய கட்சியின் தொடக்க விழா நவம்பர் 28-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பி.க்கள் பி.எஸ். ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், பி.விஸ்வநாதன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் உள்ளிட்ட சிலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, காங்கிரஸிலிருந்து விலகியுள்ள தனது ஆதரவு தலைவர்களையும், தொண்டர்களையும் சந்திக்கும் வகையில் ஜி.கே. வாசன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும், திருச்சியில் நடைபெறும் கட்சியின் பெயர் அறிவிப்புக் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, புதிய கட்சியின் பெயரை “தமிழ் மாநில காங்கிரஸ்’ என்ற பெயரிலேயே தேர்வு செய்ய ஜி.கே.வாசன் முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, அதே பெயரில் கட்சியின் பெயருக்கு அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிப்பதற்காக ஞானதேசிகன், ஞானசேகரன் ஆகியோர் வியாழக்கிழமை பிற்பகலில் தில்லி வந்தனர்.

தில்லியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எஸ்.கே. கார்வேந்தனுடன் சேர்ந்து இருவரும் புதிய கட்சியின் பெயரை பதிவு செய்யும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, இந்த மூவர் குழு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மாலையில் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம், புதிய கட்சியின் பதிவுக்கான விவரங்களைக் கேட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் ஓரிரு தினங்கள் தில்லியில் முகாமிட்டு கட்சிக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை மூவர் குழு ஆணையத்தில் அளித்து விட்டு தமிழகம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Courtesy: Dinamani

3 thoughts on “ஜி.கே. வாசன் ஆதரவு தலைவர்கள் தில்லியில் முகாம்

  1. Tamil Nadu have became tired of Dravidian Parties. Both the main Dravidian parties became tainted. Therefore Ayya vasan is the only alternative for Tamilnadu cutting across party based politics. For the rest of one and half years it is very much essential that good governance and make the state self sufficient is the motto and it should inculcate in the minds of the youths and voters not owing allegiance to any political party.

  2. intha siria vayathil vayathil, mootha thalaivarkaluke ellatha nithanam, porumai,arivu thelivu, nermai,anaivaralum mathikapatum kunam matrum thondarkal mel mekuntha anbu,akave tamilakathil thavirka mudiatha thalaivaraka vuruvetupar,by gods grace and his confidence surely one day he will become a chief minister of tamilnadu…
    thank u
    raja
    vasun tiles
    tanjore

Comments are closed.