சுங்க சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசுக்கு த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இது தொடர்பாக த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த 21 சுங்கச்சாவடிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு உடனடியாக நாட்டில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்யப்படும் முறையை அடியோடு நிறுத்த வேண்டும்.
அல்லது மத்திய அரசே சுங்கக்கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும்.
மேலும் காலாவதியாகியுள்ள சுங்கச்சாவடிகளை காலம் தாழ்த்தாமல் அகற்றிட வேண்டும்.
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதாக முடிவெடுத்திருப்பதை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பதை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தெரிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் தமிழக அரசே சுங்கக்கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என்று திரு.ஜி.கே.வாசன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
