குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை : தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆண்டில் மழையின் அளவு 23 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை குறைந்துவிட்டது. அதனால் வேளாண்மை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் குடிதண்ணீர் தேவையில் 50 சதவீதத்தை நிறைவேற்ற முடியுமா என்ற ஐயத்தை நீர் மேலாண்மை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். வைகை ஆற்றை நம்பியிருக்கும் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்கள் சிறுவாணி மற்றும் பில்லூர் அணைக்கட்டு நீரை நம்பியிருக்கும் கோவை மாவட்டப் பகுதிகள், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றை நம்பியிருக்கும் திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்கும் அபாயம் உள்ளதாக அறியப்படுகிறது.

சென்னை மாநகரைப் பொறுத்தமட்டில் மழை பொய்த்ததால் ஏரி, குளம் வறண்டு கிடக்கின்றன  நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. நிலத்தடி நீர் கடந்த 2015ம் ஆண்டைவிட 1 முதல் 3 மீட்டர் ஆழத்திற்கு கீழே சென்றுவிட்டது. சென்னையில் உள்ள நீர்த் தேக்கங்களில் சுமார் 14 சதவீதம் மட்டுமே நீர் தேங்கியுள்ளது. ஆகவே சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் பிரச்சனை உள்ளது. தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் இந்த குடிநீர் பற்றாக்குறை பிரச்சனையை மாநில அரசு புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னதாக மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு 2000 கனஅடி நீரை தொடர்ந்து தமிழகத்துக்கு வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *