காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் விவசாயிகள் 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது, தமிழக அரசு அடக்குமுறையைக் கையாளக் கூடாது என்றார்.
