எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழக வீரர் சிவகுமாருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவகுமார் உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்து திரும்பியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, பாராட்டுக்குரியது. இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் – 2 பயிற்சி மையத்தில் சிவகுமார் ஹவில்தாராகப் பணிபுரிகிறார். ஊட்டியைச் சேர்ந்த இவர் படைத்திருக்கும் சாதனை தமிழகத்துக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. நேபாள பூகம்பம், சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் நிகழ்ந்த உயிரழப்பு சம்பவம், பனிப்புயல் போன்ற பல்வேறு இடையூறுகளை கடந்து மனம் தளராமல் சிவகுமார் மற்றும் குழுவினர் தங்கள் பயணத்தை தொடர்ந்து சென்று இத்தகைய சாதனையை புரிந்திருக்கிறார்கள். சிவகுமார் தம் வாழ்வில் சிறக்க, வளர, மேலும் பல சாதனைகளைப் புரிய என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94099#sthash.azfu6KdN.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *