எந்த காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

எந்த காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் அறிவித்தவுட ன் கூட்டணி பற்றி அறிவிப்போம். எந்த காலத்திலும், எந்த மாநிலத்திலும் எதிர் கட்சிகள் ஒன்றாக இருந்து இல்லை. மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை. அதை மக்கள் ஓட்டு போடுவதில் காண்பிக்க வேண்டும். தவறு செய்யாதவர்களுக்கு மக்கள் ஓட்டு போடவேண்டும் என்றால் யாருக்கும் வாக்களிக்க முடியாது. விவசாயிகள் கடன் வசூலிப்பின் போது ஜப்தி நடவடிக்கை கூடாது என்ற நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன். வறட்சி இல்லை என்று அரசு வழக்கறிஞர் வாதாடுவதை கண்டிக்கிறேன். விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் அதிமுக செயல்படுவதை கண்டிக்கிறோம். புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரின் தனிபட்ட செயல்கள் அங்கு வாழும் மக்களை பாதிக்கும். கதிராமங்கலம் மக்கள் மீது முதல்வரே குற்றம்சாட்டுவது நியாயமானது இல்லை. ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய அரசு அவசரம் காட்டி உள்ளது. முதல் ஜி.எஸ்.டி. கூட்டத்திற்கு பிறகு தமாக போராட்டம் குறித்து அறிவிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *