திண்டுக்கல் த.மா.கா. மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சின்னசாமி. இவருடைய வீடு ஒட்டன்சத்திரத்தில் உள்ளது. இவருடைய மகளுக்கு பூ புனித நிராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் த.மா.கா மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, சட்டசபையில் 79 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு போட்டு இருப்பது, ஜனநாயகத்திற்கு உரியது அல்ல. சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
மானிய கோரிக்கைகள் எதிர்கட்சி இல்லாமல் நடந்து இருக்கிறது. எதிர்கட்சிகளை இந்த அரசு முடக்க நினைக்க கூடாது வரும் உள்ளாச்சி தேர்தலில் கூட்டணி குறித்து தகுந்த நேரத்தில் முடிவெடுக்கப்படும், வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட தொண்டார்கள் தயாராக உள்ளனர்.
காங்கிராஸ் மாநில தலைவர் இளங்கோவன் மீது நம்பிக்கை இல்லாமல் தலைமை இயங்கி வருகிறது. இரண்டு மாதம் ஆகியும் தலைவர் போடமல் இருக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் த.மா.கா இருக்கிறது என்று அர்த்தம் என்றார். இவருடன் த.மா.கா தலைவர் ராமதாசு, திண்டுக்கல் நகர தலைவர் சந்திரன் உட்பட பொருப்பாளர்கள் கலந்துகொண்டன
