உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்,” என, மதுரையில் த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர்கள் 4வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசு பழைய கதைகளை பேசாமல் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
மணல் தட்டுப்பாட்டால் லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி மணலுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதித்து மணல் கொள்ளையர்களுக்கு அரசு துணை போவது போல் உள்ளது. தேவையான மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.மாற்று மணலுக்கும் ஏற்பாடு செய்யவில்லை.சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு விதிகளை காட்டி பட்டாசு தொழிலுக்கு தடை விதிக்கும் நிலையுள்ளது. எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது, என்றார்.
