ஏற்கனவே மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு இறக்குமதியான மணலும் விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல், தடை ஏற்பட்டு தேக்கமடைந்துள்ளது. மேலும், தற்போதும் தூத்துக்குடிக்கு இறக்குமதிக்கு வந்த மணல் வேறு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. இதற்கு எல்லாம் தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் காரணம்.
இச்சூழலில் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படும் மணலின் விலையை நிர்ணயம் செய்து, விற்பனை செய்வதற்கு பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு தற்போது அதிகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு 11 கட்டுப்பாடுகள் விதித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் எந்த விதத்திலும் மேலும் மணல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், மணல் விலை ஏற்றத்திற்கும் வழிவகுத்து விடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியோடு இருக்க வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இருக்கின்ற ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உள்பட அரசு, தனியார் என அனைத்து தரப்பினரும் மணலை தட்டுப்பாடில்லாமல், குறைந்த விலையில் தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்பெறுவதற்கு தொடர் நடவடிக்கைகளில் தமிழக அரசே நேரடியாக ஈடுபட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

The only leader in Tamil Nadu for taking care of people.