தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை வெட்ககேடானது. தற்போது பதவியில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை
டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. விவசாயிகள் தங்களுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும். குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை திறக்க முயற்சித்தால், பொதுமக்களுடன் இணைந்து த.மா.கா. போராடும்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. உரிய இடங்களை த.மா.கா.வுக்கு தரவில்லை. அதனால் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டோம். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட த.மா.கா தலைவர் குடவாசல் தினகரன், முன்னாள் நகரசபை தலைவர் ராஜேந்திரன், வட்டார தலைவர்கள் மதியழகன், முனியப்பன், சந்திரசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
