அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்பவர்கள்மீது கடும் நடவடிக்கை தேவை : ஜி.கே.வாசன்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கூட அதிக விலைக்கு விற்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சேத்துப்பாக்கம் கிராமத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அவர்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மழை வெள்ளத்தால் மக்கள் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமானம் இன்றி பொருள்களை அதிக விலைக்கு விற்பவர்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். அவ்வாறு செயல்படுபவர்களை சமூக விரோதிகளாக பாவித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.