தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

அவனியாபுரம், டிச. 29–

தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.

மதுரையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என முதல் முதலாக த.மா.கா. இளைஞரணி சார்பில் போராட்டம் நடந்தது. இதையடுத்து பல்வேறு கட்சியினர் போராடி வருகின்றனர். நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.

தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களிடம் சுமூக உறவு வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைகுறித்து வரும் சட்ட மன்ற தேர்தலில் பதில் அளிப்பார்கள்.

இவ்வாறுஅவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.பி.க்கள் சித்தன், ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தன