மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மா.கா. சார்பில் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மா.கா. சார்பில் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டு புல்லாபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மா.கா. இளைஞரணி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

முகாமை தலைவர் திரு.ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.

பின்னர் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறும்போது,

‘சென்னை புறநகரில் பெரும்பாலான இடங்களில் இன்னும் மழை வெள்ளம் வடியவில்லை.

பாம்பு மற்றும் விஷ பூச்சிகளும் அதிகளவில் உலவுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மழைநீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

எனவே தமிழக அரசும், மாநகராட்சியும் இதில் தனிகவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என்றார்.