விவசாயிகள் வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள விவசாயக் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்

விவசாயிகள் வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள விவசாயக் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தாராபுரம் அருகே கோவிந்தாபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று ஐயா ஜி.கே.வாசன் கூறியதாவது:

* தாராபுரத்தில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.

* விவசாயிகளின் நலன் கருதி அப்பர் அமராவதி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

* கடும் வறட்சி நிலவும் இந்த நேரத்தில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

மற்றும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.