அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, போனஸ் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, போனஸ் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இது தொடர்பாக தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :-

ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, பணி நிரந்தரம், ஓய்வூதியம், போனஸ், பண்டிகை கால பணப் பயன்கள் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

பண்டிகை காலத்துக்கு முன்பே போனஸ் உள்ளிட்டவற்றை வழங்கினால் தான் அவர்களது குடும்பங்கள் பயன்பெற முடியும்.

ஒட்டுமொத்த தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.