த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று காலை மதுரையில் இருந்து கார் மூலம் நெல்லை வந்தார்.
தாழையூத்து சங்கர்நகரில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதன்பிறகு அம்பை சென்ற அவர் அங்கு நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இதன் பிறகு பாளையில் ஒரு திருமண விழாவில் பங்கேற்றார்.
முன்னதாக ஐயா ஜி.கே.வாசன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரியானா மாநிலத்தில் தலித் சமுதாய குழந்தை மீதான கொடூர செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வு வேறு எங்கும் நடைபெற கூடாது.
இந்த விசயத்தில் ஒரு மத்திய மந்திரி பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார்.
இது கண்டிக்கதக்கது.
தற்போது நடைபெறும் பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
அவர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.பி. ராமசுப்பு, த.மா.கா. மாநகர் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
