பருப்பு விலை உயர்வுக்கு அரசின் தொலைநோக்கு பார்வையின்மையே காரணம்

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக, தலைவர் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கை:-

வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

பருப்பு விலை உயர்வுக்கு உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றில் அரசின் தொலைநோக்கு பார்வையின்மையே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் மாதங்களுக்கான தேவையை முன் கூட்டியே கணித்து, விளைச்சல் காலத்தில் கொள்முதல் செய்து, போதுமான அளவு கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பருப்பு பற்றாக்குறை மற்றும் விலை உயர்வை அரசு ஒர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஐயா ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.