தமிழகத்தில் சீன பட்டாசுகள் இறக்குமதியாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இது தொடர்பாக தலைவர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழகத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் நாட்டின் தேவையில் சுமார் 80 சதவிகிதம் அளவிற்கு பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
பட்டாசுத் தொழிலை நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வதாக தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், இந்தாண்டு பட்டாசுகளுக்கான ஆர்டர்கள் குறைந்துள்ளதால் சுமார் 530 கோடி அளவிற்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
எனவே தமிழகத்தில் பட்டாசுத் தயாரிக்கும் தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை என்றும் ஐயா ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கு ஒரு போதும் மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ள அவர், சீன பட்டாசுகளின் ஊடுருவலை முழுவதுமாக மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
