மத்திய அரசு கர்நாடக அரசை தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உத்தரவிடவேண்டும்

தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு தண்ணீர் வழங்காமல் வஞ்சித்து வருகின்றது.

மத்திய, மாநில அரசுகள் இனிமேலும் தண்ணீர் பிரச்னையில் மவுனம் காட்டாமல், மத்திய அரசு கர்நாடக அரசை தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உத்தரவிடவேண்டும்.

மேலும் மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை தவிர்த்து அனைத்து கட்சி பிரமுகர்களை டெல்லிக்கு அழைத்து சென்று விவசாயிகளின் உண்மை நிலையை எடுத்து கூறி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சியில் ஈடுபடவேன்டும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்