காவிரி நீர் பிரச்னை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் முதல்வருக்கு ஐயா ஜி.கே.வாசன் வேண்டுகோள்

காவிரி நீர் பிரச்னை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் முதல்வருக்கு ஐயா ஜி.கே.வாசன் வேண்டுகோள்

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கை:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்கு  ஆண்டு தோறும் 192 டி.எம்.சி  காவிரி நதிநீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்பது தான் நியதி. ஆனால் இது வரை கர்நாடக அரசு உரிய தண்ணீரை, உரிய காலத்தில் தமிழகத்துக்கு  வழங்காமல் மறுத்து வருகிறது.

இதனால் காவிரி நதிநீரை நம்பி இருக்கும் சுமார் 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி செய்த பயிர்கள் கருகி வருகின்றன.

சுமார் 40 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தையின் போதும் கர்நாடக அரசின் அமைச்சர் தமிழகத்துக்கு காவிரி  ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியிருந்தார்.

காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடக அரசின் செயல்பாடுகள் நம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல, மாநிலங்களுக்கிடையேயான  ஒற்றுமையையும் சீர்குலைப்பதாக அமைந்திருக்கிறது.

தமிழக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு  கூட கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்ற சூழலில் கர்நாடக அரசின் இந்த நியாயமற்ற பேச்சு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல்  இருக்கின்றது.

தமிழக அரசும் கர்நாடக அரசை கண்டிப்பதோடு, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து பாரதப் பிரதமரை நேரடியாக சந்தித்து, இந்தப்  பிரச்னைக்கு ஒரு காலக்கெடுவையும் நிர்ணயித்து அதற்கு நிரந்தர தீர்வை மத்திய அரசு ஏற்படுத்தி தர அனைத்து தீவிர முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று

ஐயா அவர்கள்  தெரிவித்துள்ளார்.