மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியின் முதல் வரிசையில் தமாகா இடம்பெறும்.

திருச்சியில் ஐயா ஜி.கே. வாசன் பேட்டி

திருச்சி மாநகரில் மக்களை நோக்கி மக்கள் தளபதி என்ற தலைப்பிலான சுற்றுப்பயண நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பாக அவர் அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரையும் நேரடியாகச் சென்று சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறேன்.

அந்தக் குறைகளைக் களைவதற்காக ஆட்சியாளர்கள், அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டு வாதாடி அவற்றைப் பெற்றுத்தரப் போராடுவோம் என்றார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது, காவிரி நீர்ப் பிரச்னை ஆகியவற்றுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தி, பிரதமரைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் முதல் வரிசையில் தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் என்றார் ஐயா ஜி.கே.வாசன்.

தொடர்ந்து காட்டூரில் விவசாயிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தை மாநில விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாநகரின் பல பகுதிகளில் கொடியேற்றி தொண்டர்களிடம் பேசிவிட்டு, மாநகரில் நடைபெற்ற கூட்டத்திலும் பேசினார் ஐயா ஜி.கே. வாசன்.

இந்தப் பயணத்துக்கு, மாநகர் மாவட்டத் தலைவரும் முன்னாள் மேயருமான சாருபாலா ஆர். தொண்டைமான் தலைமை வகித்தார்.

மேலிடப் பார்வையாளர் சு.க. முருகவேல்ராஜன், வடக்கு மாவட்டத் தலைவர் எம். ராஜசேகரன், தெற்கு மாவட்டத் தலைவர் நந்தா கே. செந்தில்குமார் உள்ளிட்டோரும் பேசினர்.