இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் கிடைக்க வேண்டும்.

சர்வதேச நீதி விசாரணைக்கு அந்த நாடு ஒத்துழைப்பு கொடுக்க இந்தியா வற்புறுத்த வேண்டும்.

இந்த பிரச்சினைகள் எல்லாம் நிலுவையில் இருக்கும் போது இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழர்களின் எண்ணங்களுக்கு எதிரானது.

இது அவர்களை மேலும் மேலும் புண்படுவதாகும். அவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்க கூடாது.

மத்திய–மாநில அரசு இதற்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த ஆட்சியில் இதே போல் பயிற்சி கொடுத்த போது நான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்பதை நினைவு படுத்துகிறேன்.