தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்க 14–வது ஆண்டு விழா சங்க தலைவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் தலைமையில் நடந்தது.
பொருளாளர் ராஜசேகரன் வரவேற்றார்.
விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்விட்ட காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் நிதி உதவி மற்றும் ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.
பின்னர் ஐயா ஜி.கே.வாசன் பேசியதாவது:–
பொதுப்பணித்துறை உள்பட பல்வேறு பணிகளுக்கு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்களின் பங்கு முக்கியம்.
சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் திட்ட பணிகளில் அவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.85 சிறு நிறுவனங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த நிறுவனங்களுக்கு ரூ.60 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர். அதை உடனே மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு தலைவர் அவர்கள் பேசினார்.
