மக்கள் தலைவர் ஐயா மூப்பனாரின் 14–ம் ஆண்டு நினைவு தினம் , “நினைவகத்தில் நலத்திட்ட உதவிகள் பற்றிய ஓர் சிறப்பு செய்தி”

* விடியல் சேகர் ஏற்பாட்டில் 14 பேருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

*  வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஏற்பாட்டில் 100 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

* தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் ஏற்பாட்டில் தலா 10 பேருக்கு தையல் எந்திரம், சைக்கிள், இஸ்திரி பெட்டிகள் வழங்கப்பட்டன.

* மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சவுந்தர்முருகன் ஏற்பாட்டில் தையல் எந்திரங்கள், சைக்கிள்கள் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித் தொகை 500 மூப்பனார் போட்டோக்கள் வழங்கபட்டன.

* மகளிர் அணி மாநில தலைவி மகேஸ்வரி ஏற்பாட்டில் 300 பெண்களுக்கு புடவைகள் பார்வையற்ற 10 பேருக்கு ஊன்று கோல்கள், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

* வர்த்தக அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து ஏற்பாட்டில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

* சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அமிர்கான் ஏற்பாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், புத்தகப்பை வழங்கப்பட்டது.

* மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஜி.ஆர்.கதிரவன் ஏற்பாட்டில் 500 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன.

* மாநில பொதுச் செயலாளர் பி.ஜவஹர்பாபு ஏற்பாட்டில் த.மா.கா. தொண்டர் ஒருவருக்கு 55 ஆயிரம் மதிப்புள்ள ஹோன்டா ஆக்டிவா இருசக்கரவாகனம் மற்றும் கல்வி உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் வீதம் இரண்டு நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. சவுந்தர்முருகன், எம்.கோவிந்தசாமி, ஆர்.புனிதன், பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* த.மா.கா. மாநில இணை செயலாளர் ஐ.டி.அரசன் ஏற்பாட்டில் ஊனமுற்ற 2 பேருக்கு மூன்று சக்கரசைக்கிள் வழங்கப்பட்டது.மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

* மறைந்த சைதை ரவி நினைவாக பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

* அனைத்து நலத்திட்ட உதவிகளையும் ஐயா ஜி.கே.வாசன் வழங்கினார்.

* முன்னதாக காமராஜ் இல்லத்தில் இருந்து மூப்பனார் பேரவை தலைவர் எல்.கே.வெங்கட் தலைமையில் மூப்பனார் நினைவு ஜோதியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதை ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.