இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், நிரந்தர தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகைளை மேற்கொள்ள வேண்டும்.

மிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவர்களை அச்சுறுத்துவது, கைது செய்வது, வலைகளை அறுப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற அட்டூழியங்களில் தொடர்ந்து ஈடு படுகிறார்கள்.
இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறது. குறிப்பாக ராமேஸ்வரம், நாகப் பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்.
01.06.2015 அன்று ராமேஸ்வரத்தி லிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை 02.06.2015 அன்று கைது செய்து, மன்னார் நீதிமன்றத்தில் விசாரிக் கப்பட்டு அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களது காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வழக்கு வரும் 13.08.2015 அன்று மீண்டும் விசாரணைக்கு வர இருக்கின்றது. ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இலங்கை அரசால் இன்னும் விடுதலை செய்யப் படாமல் இருக்கின்றனர். மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட ராமேஸ்வர பகுதி மீனவர்களின் 8 படகுகளும், புதுக்கோட்டை பகுதி மீனவர்களின் 5 படகுகளும்,
நாகப்பட்டின பகுதி மீனவர்களின் 5 படகுகளும் உரிய மீனவர்களிடம் ஒப்படைக்கப் படவில்லை. ஏற்கனவே இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, விடுவிக்கப் பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் 18 படகுகள் சேதமடைந்த நிலையில் இன்னும் இலங்கையின் வசம் இருக்கின்றது.
இலங்கையில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனைக் காரணம் காட்டி இலங்கை அரசு உள்நாட்டில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இலங்கை சிறையில் வாடும் நம் தமிழக மீனவர்களை விடுவிக்க கால தாமதம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஏற்புடையதல்ல. இது இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற தன்மையை மேலும் எடுத்துக்காட்டுகிறது. இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே பேச்சு வார்த்தை விரைவில் சுமூகமாக
நடைபெறுவதற்கு ஏதுவாக இலங்கை அரசுடன் மத்திய அரசு கண்டிப்போடு பேசி நம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும், பறிமுதல் செய்த அனைத்து படகுகளையும் உரிய மீனவர்களிடம் ஒப்படைக்கவும், சேதம டைந்த படகுகளுக்கு நிவாரணம் பெற்றுத் தரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு நம் மீனவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, அதற்கேற்ப மத்திய அரசை வலியுறுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஒளி தீபம் ஏற்றிட வேண்டும்.