ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த 8 வருடமாக போராடி வருகின்றனர். தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6 வது ஊதியக் குழுவில் திருத்தம் மேற்கொண்டு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு  இணையான ஊதியம் வழங்க வேண்டும். குறிப்பாக இடை நிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம் வழங்க வேண்டும். தமிழ் பாடத் திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும்.ஆசிரியர்களின்  பாதுகாப்புக்கு உரிய புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகிறது. தேர்வு காலம் என்பதால் ஆசிரியர் சங்கத்தோடு நேரடிப் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வு காண அரசு  வழி வகுக்க வேண்டும்.