சட்டப்பேரவையை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது, பேரம் பேசப்பபட்டதாக வெளியான தகவலின் உண்மையை வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனை சட்டப்பேரவையில் எழுப்பப் பட்ட போது, அதை நடுநிலையாக மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் சபாநாயகர் தனபால் தெளிவுப்படுத்திருக்க வேண்டும் என்றும் வாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை விவாதிக்குமாறும், ஜனநாய முறைப்படி சட்டப்பேரவையை நடத்துமாறும் தமிழக அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஆட்சி அதிகாரதத்தில் எவ்வித குழப்பமும், பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் எனவும் வாசன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *